saykumar

Friday, March 26, 2010

தூய தமிழ் இயக்கம்.

ஊடகங்களில் உள்ள தமிழைத் தூய தமிழாக்க வேண்டும் என்னும் மொரு வற்புறுத்தலும் இன்று உண்டு. இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என யோசித்துப் பார்த்தல் வேண்டும். நவீன தமிழ் என்பது கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பல போராட்டங்களிடையே வளர்ந்து வந்திருக்கிறது. சம்ஸ்கிருதத்தின் தாக்கத்தை முன்பு பெரிதாகக் கொண்டிருந்த அது ஊடகங்களில் அதனை வெகுவாகக் குறைத்து இன்று ஒரு சமப்பாட்டுக்குள் வந்திருக்கிறது எனலாம். இந்த நிலையில் மீண்டும் கலப்பில்லாத தூய தமிழுக்குத் திரும்ப வேண்டும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாததோடு, வரவேற்கக்க் கூடியதும் அல்ல என்றே சொல்லவேண்டும். கலப்பு என்பது வளர்ச்சிக்கான வித்து. இயற்கையில் எல்லாநிகழ்வுகளும் கலப்பில் வளர்வனவே.

சமஸ்கிருத மொழிச் சொற்கள் தமிழில் கலந்து, பல தமிழாகவே ஆகிவிட்டன. அவற்றை நாம் குறைந்த அளவில் பயன் படுத்திக் கொள்வது தமிழுக்கு ஓர் அழகேயாகும். சமஸ்கிருதச் சொற்களுக்கு மாற்றுத் தமிழ்ச் சொற்கள் இருந்தாலும் பல்வகைப் படுத்தல் கருதி இந்தச் சமஸ்கிருதச் சொற்களை பக்கத்தில் வைத்துக் கொள்வதே நல்லது என்பதே என் கருத்து.

எல்லா சமஸ்கிருதச் சொற்களும் தமிழ் மூலம் உடையவையே என்னும் கருத்தும் பாவாணர் நாள் தொட்டு இருந்து வருவதால் சமஸ்கிருதச் சொற்களை அளவாகப் பயன்படுத்துவதில் நமக்கு எந்தத் தயக்கமும் தேவையில்லை என்று கூடச் சொல்லிவிடலாம்.

No comments:

Post a Comment