saykumar

Friday, March 26, 2010

கண்ணதாசன் !!!

கண்ணதாசன் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!




பிறப்பில் வருவது யாதென கேட்டேன் பிறந்து பார் என இறைவன் பனித்தான்

இறப்பில் வருவது யாதென கேட்டேன் இறந்து பார் என இறைவன் பனித்தான்

வாழ்வில் வருவது யாதென கேட்டேன் வாழ்ந்து பார் என இறைவன் பனித்தான்

அனுபவித்தே தான் வாழ்வது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏன்? என கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்.



கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (பாகம் II) - 03

3. வாசலில் அமீனா நிற்கிறான்
*************************

தமிழர் ஒருவர் லண்டன் நகருக்குச்சென்றார்.

காலையில் குளித்துவிட்டுக் கட்டுக்கட்டாக விபூதி பூசினார்.

அதைபார்த்த ஓர் ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார்.

“ஏன் இப்படிச் சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?”

தமிழர் பதில் சொன்னார்;

“இந்த உடம்பு என்றாவது ஒருநாள் சாம்பலாகப் போகிறது என்பதை நாங்கள் தினமும் நினைவுப்படுத்திக்கொள்கிறோம். அதன்மூலம் கெட்ட புத்தி விலகிவிடுகிறது.”

ஆங்கிலேயர் திகைத்துப்போனார்.

அன்று முதல் இந்து மதத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்யத்தொடங்கினார்.

இன்றும் லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தத் தமிழர் எனக்குச் சொன்ன செய்தி இது.

யாக்கை நிலையாமையை இந்து சமய த்த்துவ ஞானிகள் அடிக்கடி கூறி வந்திருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.

வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டக்குவதற்கே.

விட்டுவிடப் போகுதுயிர்; விட்ட வுடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்.

-என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையைக நடத்துமாறு செய்வதற்கே.

இந்த ஞானம், ஒவ்வொர் சராசரி மனிதனுக்குக் கூட ஒருநாள் வருகிறது.

ஏதாவது ஒருசாவு வீட்டுக்குப் போகும்போது “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது.

அதையே மயான வைராக்கியம்’ என்பார்கள்.

“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்றுபாடியவர், இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப்பாடவில்லை.

‘பொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற, நீ பொய் சொல்லாதே. நீ திருடாதே, பிறரை ஏமாற்றாதே. என்று எச்சரிப்பதற்கப் பாடினார்.

இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன்.

இந்த உடல் இலவசமாக்க் கொடுத்த பரிசு.

தலை வழுக்கை விழுவதோ, ரோம்ம் நரைப்பதோ, பல் விழுவதோ இறைவன் நமக்குப் போடும் ஞாபக்க் கடிதம்.

‘நீ கையெழுத்துப்போட்ட பாத்திரம் காலாவதி யாகிப் போகிறது.

கடனைக் கட்டுவதற்குத்தயாராகிக் கொள்.

உன் உயிரை நான் ஜப்தி செய்யப்போகிறேன்.

-என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான்.

உயிரை ஜப்தி செய்வதற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும், ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள்.

அந்த அமீனாவுக்கு யமன் என்றும், கூற்றுவன் என்றும் பெயர் கொடுத்தார்கள்.

உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில், நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.

சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.

துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது.

அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு வரு வழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படி யாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத்தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வரு முன்பே மனிதனை அறிந்துகொள்ளச்செய்வது, இந்து சமய வாதிகளின் நோக்கங்களில் ஒன்றாகும்.

எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம்.

ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவிஎன்று நாம்ம், படையாதே! -மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே!
செத்தாரைப் போலத் திரி!

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ? நெஞ்சகமே!
வைப்பிருக்க வாயில் மனைஇருக்கச் - சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டு அப்பைக்
க்கிச் செத்துக் கொட்டக் கண்டு!

ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே! - வன் கழுக்கள்
த்த்தித்தத் திச்செட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு!
முதற்சங்கு அமுதூட்டும், மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

எத்தனைநாள் கூடி எடுத்த சரீரம் இவை!
அத்தனையும் மண்தின்ப தல்லவோ - வித்தகனார்
காலைப் படித்து மெள்ளக் கங்குல்பகல் அற்றடித்தே
மேலைக் குடியிருப்போ மே?

இருப்பதுபொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருகும் தீங்கினை யுன்னாதே- பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேயக்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!

-இவை பட்டினத்தார் பாடல்கள்.

காயம் நிலையாமையைப் பற்றிப் பாடிய பட்டினத்தார் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் தான் பாடினார் என்றாலும், அந்தச் சிந்தனை வந்த பிறகுதான், அவருக்கு அமைதி வந்தது என்பதை, அவரது வாழ்க்கையிலிருந்து காணுகிறோம்.

“செத்தாரைப் போலே திரி” என்று அவர் சொன்னது பற்றில்லாமல் வாழச் சொன்னதாகும்.

அதே நேரத்தில், ஆவியும் காயமும் அழிவதென்றாலும், பாவி என்ற பெயரைப்படைக்கக்கூடாது என்று அவர் கூறுவது கவனிக்கத்தக்கது.

வாழ்க்கைகுமூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார்.

முதல் சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது.

இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது.

மூன்றாவது சங்கு மரணத்திற்குப்பிறகு ஊதப்படுகிறது.

அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிளார் பட்டினத்தார்.

சங்கம் என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும், சங்கம்ம் ஆவதையும் குறிக்கும்.

‘முதற்சங்கம் அமுதூட்டும்’ என்பது, சங்கு பால்கொடுப்பதைக் குறிக்கிறது.

‘மொய்குழலார் ஆசை நடுச்சங்கம்’ என்பது, ஆண் பெண் உறவு நடுவிலே சங்கம்மாதைக்குறிக்கிறது.

‘கடைச்சங்கம்’ என்பது கடைசியில் மரணத்தில் சங்கம்மாதைக் குறிக்கிறது.

“இவ்வளவுதான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார் பட்டினத்தார்.

‘இந்த உடல் நமக்கே சொந்தம்’ என்று நாமிருக்கிறோம்.

‘நாயும், நரியும், பேயும், கழுகும், தாம் ஒரு நாள் இதை உண்ணப்போகிறோம்’ என்று காத்துக்கொண்டிருக்கின்றனவாம்!

நிலையாத இந்த உடம்பின் மீது எவ்வளவு மோகம்ந எவ்வளவு வருணனைகள்!

இந்து உடம்பும் அழகும் பொய்யென்று நினைப்பதில் என்ன லாபம் என்று நீங்கள் கேட்க்க் கூடும்?

அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப் போவது, முதல் லாபம்.

கடற்பாம்பின் கால்கள் போல் ஆசைகள் திசைதோறும் பரவாமல், கிடைத்த வரைக்கும் நிம்மதி என்று வருவது, இரண்டாவது லாபம்.

அதனால்தான் இந்துக்கள், பிற மத்த்தவரைப் போல், இறந்தவர் உடலைப் புதைப்பதில்லை; எரித்து விடுகிறார்கள்.

இந்த உடம்புகளை தவணை முடிந்துவிட்டது; அது சாம்பலாகி விடுவதுதான்நியாயம். அதைப் புதைத்து வைத்து, இன்னும் அது இருப்பது போன்று பிரமையை உண்டாக்கக்கூடாது என்று இந்துக்கள் கருதினார்கள்.

புதைக்கப்பட உடலுக்கு, அது புதைக்கப்பட்ட இடம் சொந்தமாகி விடுகிறது.

எரிக்கப்பட்ட உடலுக்கு, எது சொந்தம்?

“காதற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றார்கள்.
இறந்த உடலுக்கு, ஏன் ஆறடி நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும்?

அது சாம்பலாகிக் கரைந்து போவதுதான் முறை என்று நம்பினார்கள்.

தங்களைத் தாங்களே சரிபார்த்துக்கொள்ள நமது த்த்துவ ஞானிகள் வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை.

“அமீனா வாசலில் நிற்கிறான்.”

“இறைவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தயாராக இருங்கள்”

சார்லிசாப்ளின்

சார்லி சாப்ளின்யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம்the great dictatorஇந்த படத்தை ஹிடலர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்பபார்த்துக்கொண்டே இருந்தானாம்!







'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது,உயவர்வானது...!தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு,தன் கணவனை விட,பிள்ளைகளின் உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.



ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார்.முழுப்பெயர் 'சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்'.லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா.


இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம்.இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி.ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்னை;பாட முடியவில்லை!


ஒரே கூச்சல்!அவமானம் கண்ணீராக கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள்,ஹென்னா.



ஆறு வயது சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான்.அது ஒரு மாக கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது!



தன் அம்மா சொல்லிக்கொடுத்த பாடலை பாடி,தன் பிஞ்சு கால்,கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான்.விசில்,கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது!சில்லறைகள் சீறிப் பறந்தன.



சில்லறைகளை பொறுக்கினான்,சார்லி.பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம்!

'சில்லறைகளை பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்;என்னால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!' மீண்டும் கொல்லென்று எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது!



தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி...மேடைப்பாடல்,துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் போதுமானதாக இல்லை!பசிக்கு முன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள்.வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் அப்பா மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள்,தீர்ப்பு இழுத்தது.தன் பிள்ளைகள் இங்காவது வசதியாக படிக்கட்டும் என்று மூவரும் அநாதை விடுதி ஒன்றுக்குப் போய் சேர்ந்தார்கள்.தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள்.


காலக்கொடுமை!அதனால்தானோ என்னவோ ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.சார்லி,ஸிட்னியையும் சார்லியின் அப்பா தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.அப்பா தன் இன்னொரு மனைவி லூஸி வீட்டுக்கு கூட்டிப்போனார்.



அங்கேயும் பசி சார்லி,சிட்னியையும் வீதிக்கு துரத்தி சிரித்தது.'அம்மா,அம்மா'என்று கதறி அழுதான் சார்லி.அங்கே அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும் இல்லை!ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த அதிசயம் நடந்தது!


அம்மா ஹென்னா வந்திருந்தாள்!!சார்லி,சிட்னியையும் ஓடிப்போய் ஒட்டிக்கொண்டார்கள்!மீண்டும் மூன்று உயிர்களும் ஓர் உயிரானதுஅந்த நமக்கும் மீறிய சக்திக்குப் பெயர் தான் அன்பு!


சாப்ளின் அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வந்தது.பள்ளிப் படிப்பு தடையில்லாமல் தொடர்ந்தது.பள்ளிகளில் நடக்கும் நாடகம்,நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சம்பாதிக்க தவறவில்லை!அவன் சார்ந்த நடன,நாடக்குழு அமெரிக்காவிற்கு போகும் சந்தர்ப்பம் வந்தது.



அங்கு போன சாப்ளின் அமெரிக்க சுதந்திரதேவி சிலை நோக்கி தன்னை மறந்து கத்தினான் 'ஏய்! அமெரிக்காவே பத்திரமாக இரு!


இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்து கொண்டிருக்கிறான்!


' என்று.அடுத்த அய்ந்தாண்டுகளில் அதுதான் நடந்தது.உலகத்தையே கொள்ளையடித்தான்,சாப்ளின்.



தன் முதல் காதலி ஹெட்டியை சார்லியின் ஏழ்மையைக் காட்டி பிரித்தான்,அவளின் அண்ணன்.அந்த தோல்வியை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.அவரை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்த்து!பிற்பாடு அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமண வாழ்க்கைகளுக்கும் அதுவே காரணமாக அமைந்தது.


தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க,பொய்யாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு...தீவிர வாசிப்பை மேற்கொண்டார்.தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது!



முதல் படம்

news paper reporter ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர்.


அவர் சைசுக்கு உடைகள் இல்லை எனபதால்,பெரிய சைஸ் தொள தொள பேண்ட்,பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை,ஷு,தொப்பி,கைத்தடி.


இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை!இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது!


அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட சிரிப்பால் மேடை அதிர்ந்து அடங்கியது!என்னிடம் கதை ஒன்று இருக்கிறது,நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்றார், சென்னடிடம்,சார்லி.


முதலில் ஒத்துக்கொள்ளாத சென்னட்,மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு ஒரு நிபந்தனை விதித்தார்.


"அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தயும் வட்டியும் முதலுமாக நீங்கள் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?" என்று கேட்டார்.அதற்கு சாப்ளின் சொன்னார் "முழுப்பணத்தையும் திருப்பித் தருவேன்.


அந்தப் படம் தோல்வியடைந்தால்,நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்"என்று அப்படி இயக்கி வெளிவந்த முதல் வெற்றிப்படம்



caught in the rain

ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ தெரிய வர...


மலர்கொத்துக்கள்,பேண்டு வாத்தியங்கள்,உயரமான கம்பம்,மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம்!பசியும்,அவமானங்களும் இதற்கு தானா?நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும் காவியமாக வேண்டாமா?



யோசிக்க ஆரம்பித்தார்.அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களிடம் அரசு நடத்தும் கெடுபிடிகளை கடுமையாகச் சாடி


the immigrant படம் வெளியானது அமெரிக்க பிணந்தின்னும் கண் சார்லியை கண்காணிக்க உத்தரவு போட்டது,இப்படித்தான்!


சார்லி ஏழைகளைப்பற்றியே படம் எடுத்ததால்,பணக்காரர்கள்,எதிரிகளானர்கள்.வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று!இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று மில்ட்ரெட் ஹாரிஸ் எனபவளை திருமணம் செய்து கொண்டார்.ஆண் குழந்தை பிறந்து இறந்தது,அவன் நினைவாக தயாரன படந்தான் the kid லிட்டா கிரே,பவுலட் கோடர்ட்,ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் துன்பியல் வரலாறு!


அவர்கள் அனைவரும் தோற்றத்தில் ஹெட்டியைப் போலவே இருந்தார்கள் என்பது இன்னொரு அதிசய தகவல்!


புகழின் உச்சியில் இருந்த நேரம்.."என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஹெட்டி!நான் ஒரு முட்டாள்,அபாக்கியசாலி.



நீங்கள் எவ்வளவு உயரமானவர் எனபதை உங்கள் படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்கு தெரிவியுங்கள் கடைசியாக உங்களின் கைகளை பிடித்து கதறி அழு வேண்டும்.என் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்!


" என்ற கடிதம் படித்து தன் பார்த்த எல்லா வேலைகளையும் ரத்து செய்தை விட்டு லண்டனுக்கு பயணமானர்,சாப்ளின்.பஞ்சையாய்,பராரியாய்,பிச்சைக்காரனாய் துரத்தியடித்த அதே லண்டன் தெருக்கள் வெடகமே இல்லாமல் விழாக்கோலம் பூண்டது.சார்லியை வரவேற்க;

வெறி பிடித்த மக்கள் வெள்ளம்!

இந்த தடவையும் ஹெட்டி ஏமாற்றித் தான் போயிருந்தாள்!

அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது!

அவளின் நினைவாக கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி.இந்த இடி செய்தி கேட்டு இன்னும் ஒரு முறை செத்துப் போனார்!கடவுளைப் போலவே காதலும் சரியாக புரிய படாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது!



"ஓ வென கதறி அழக்கூ முடியவில்லை அவ்வளவு மக்கள் வெள்ளம்!" நடு இரவில் ,முகத்தை மப்ளர் கொண்டு மூடி பசியால் கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறைப் போய் மவுனமாக அழுது விட்டு வந்தான்,அந்த மாக கலைஞன்!


கூடவே தன் தாயின் மரணமும் சுனாமியாக வந்து தாக்கியது,"இந்த தோற்கும் அன்பு அவளுடையது! அவளது தியாகம்,திறமைகள்,அவள் பட்ட வேதனைகளுக்கு முன்னால்,நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்!

" என்று சாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழதார்!சினிமா பேச தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே எடுத்தார்!

தான் எடுக்கும் பேசாத பற்றி மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு அந்த படந்தான் city lights எதிரிகள் சதி செய்ததால் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்த படம்!


இந்தியாவிலிருந்து வரும் காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்!உலகம் இயந்திரமாகி வருவதையும்,மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த modern times வெளி வந்த பிறகு மனித குலத்தை மேம்படுத்த வந்தவனை சரியாகத் தான் அடையாளப்படுத்தியது அல்ப புத்தி அமெரிக்க அரசு "கம்யூனிஸ்ட்!


"என்று.அமெரிக்க அரசு லண்டனுக்கு புறப்பட்ட சார்லியிடம் தெரிவித்து,"உங்கள் சொத்து பறிமுதல் செய்யப் படுகிறது.அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்ய படுவீர்கள்!"ஸ்விட்சர்லாந்து குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார்.



1972 ஆம் வருடம் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது!


1977 இல் ஒரு கிறிஸ்துமஸ் நாளில்....
எல்லோரையும் கண்ணீர் வர சிரிக்க வைத்த அந்த மாக கலைஞனின் மரணம் அழவைத்தது

Gone too soon

" Gone too soon " ( சீக்கிரமே மறைந்து விட்டாய் ) என்பது மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று . எய்ட்ஸ் நோய் பாதித்திருந்த ஒரு சிறுவன் பதினோரு வயதிலேயே இறந்து போன போது ஜாக்ஸன் அவன் நினைவாக அந்தப் பாடலைப் பாடினார் . உள்ளத்தை உருக்கும் குரலில் அந்தப் பாடலின் இசையும் , பாடல் வரிகளும் , வீடியோவும் , எய்ட்ஸ் நோயைப் பற்றிய செய்திகளை அழுத்தமாக உலகத்துக்கு எடுத்துச் சொன்னது .


மைக்கேல் ஜாக்ஸ்னின் பெரும்பாலான பாடல்கள் இப்படிச் சமூக அக்கரையுடன் எழுதப்பட்டவையே . பலப் பாடல்களை அவரே எழுதினார் . நிறவெறி , யுத்த வெறிக்கான எதிர்ப்பு , உலக அமைதிக்கான கோரிக்கைகள் , கறுப்பின மக்களின் துயர்கள் , காடுகளை அழிப்பதை எதிர்ப்பது போன்றவை மட்டுமல்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புக்கள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது .


உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் ( சுமார் 39 நிறுவனங்கள் ) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது .


உலக இசை சரித்திரத்தில் மைக்கேல் ஜாக்ஸனைப் பொல் மக்களிடையே பிரபலமானவர் வேறு யாரும் இல்லை . பீட்டில்ஸ் இசைக்குழு ( ' நாங்கள் ஏசுநாதரை விடப் புகழ் பெற்றவர்கள் ' என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியவர்கள் ) , எல்விஸ் பிரஸ்லி போன்றவர்களும் கோடிக்கணக்கான வெறி கொண்ட ரசிகர்களைக் கொண்டிருந்தாலும் யாருமே தங்கள் வாழ்நாளில் ஜாக்ஸன் அலவுக்கு 750 மில்லியன் இசைத் தொகுதிகளை விற்றதில்லை .


' இசை என்பது கேட்பதற்கு மட்டும் இல்லை , பார்ப்பதற்கும்தான் ' என்கிற மோடவுன் வீடியோ கலாச்சாரத்தை உருவாக்கியவர் ஜாக்ஸன் .


கிறிஸ்டல் கையுறைகள் , தங்கம் மின்னும் உடைகள் , ' மூன்வாக் ' என்று சொல்லப்பட்ட பிரத்யேக அலை நடை கொண்ட நடனம் , வெளிறிய நிறம் , கருகிய தலைமுடி , வசீகரப் புன்னகை , கூலிங்கிளாஸ் , தொப்பி , சைக்கடலிக் வண்ணவிளக்குகள் புகைந்த பிரும்மாண்ட செட் இவைகளுடன் அவர் மேடைகளிலும் , வீடியோக்களிலும் காண்பித்த பொழுதுபோக்கு இசை , நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களைப் பைத்தியமாகவே ஆக்கின .


தன் 45 வருட இசைத் தொழிலில் 2500 கோடி ரூபாய் டாலர்கள் சம்பாதித்த பாப் இசையின் அரசன் ஐம்பது வயதில் அகால மரணமடைந்தது ஏன் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் தாங்க முடியாத கேள்வி .


ஜாக்ஸனின் சிறு வயதுப் பருவம் துயரத்துடன் கழிந்தது . இந்தியானா மாநிலத்தில் ஒரு புறநகர் தொழிற்பேட்டைப் பகுதியில் பிறந்தார் மைக்கேல் ஜோசப் ஜாக்ஸன் . தந்தை ஒரு மில் தொழிலாளி . அவரைப் போன்ற அராஜகத் தந்தையைப் பார்க்க முடியாது . தன்னுடைய ஐந்து ஆண் குழந்தைகளையும் அவர் பாடாய்ப் படுத்துவார் . ஒரு காலைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்கி மைக்கேலை அலற அலற அடிப்பார் .


ஓப்ரா வின்ஃப்ரே டெலிவிஷன் ஷோவில் அவர் சில விஷயங்களை ஒப்புக்கொண்டார் . சின்ன வயதில் அப்பா கொடுமைப்படுத்தியதைப் பற்றிச் சொன்னபோது வாய்விட்டு அழுதார் . விட்டிலிகோ என்கிற தோல் நோய் இருப்பதை ஒப்புக்கொண்டார் . ஒரு விபத்தின்போது உடைந்த மூக்கு நுனி அடுத்தடுத்த ஆபரேஷன்களில் இன்னும் மோசமானதாக அதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் . ஆனால் , சிறுவர்களை முறைகேடாகப் பயன்படுத்டியதே இல்லை என்றும் அழுத்தமாகச் சொன்னார் .


' ஐ வில் பீ தேர் ' என்பது அவருடைய மற்றொரு ஹிட் பாடல் . அது உண்மைதான் . ஜாக்ஸன் எப்போதும் இருப்பார் , தன்னுடைய அழியாத பாடல்களின் மூலம் .


* முழு உலகமே பாப் இசையின் முதல் பெரும் நட்சத்திரமாக மதித்துப் போற்றும் மைக்கேல் ஜாக்சன் வெறும் 60 பாடல்கள்தான் பாடியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா ?


அவரது முதல் இசைத் தொகுப்பு இரண்டு கோடிப் பிரதிகள் விற்றிருக்கின்றன . அவரது ' த்ரில்லர் ' தான் இன்று வரை உலகில் மிக அதிகமாக விற்ற இசைத் தொகுப்பு . தன் 50 வயதிலேயே , அவரே ஒரு பாடலில் சொல்லிக் கொள்வது போல , ' மாலை வானத்தில் எரிந்து செல்லும் தாரகை போல விரைவாக மின்னி மறைந்தார் !'.




இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை..

இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை


பகுத்தறிவுவாதியின் கொள்கை

பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும். தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும்.

மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும். ஏனெனில் இந்த உலகத்தில் இருந்து ஆகாய மார்க்கத்தில் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது, அதுவரை தூர திருஷ்டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகிவிட்டது, எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி.

இராட்சதர் என்பதும் சுத்தப் பொய், ஏனென்றால், இராட்சதர், அசுரர் என்பவர்கள் எல்லாம் இந்த பூமியில் இருந்ததாகத் தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டிகதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை.

இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளாக இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால் கடவுளுக்கு எதிரி இருக்க முடியுமா?

ஜோசியம் என்பதும் பெரும் பொய், வெறும் ஏமாற்றுதலை ஆகும்.

இராகு காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் பொய், பட்சி சாஸ்திரமும் பச்சைப் பொய் நட்சத்திரப் பலன், கிரகப் பலன், வாரப் பலன், மாதப்பலன், வருடப் பலன் என்பவை யாவும் பொய்.

பல்லி விழும் பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய். கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல், காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய்.

மந்திரம், மந்திரத்தால் அற்புதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டம், பொய்.

தெரியாத, புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆகவேண்டும் என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததின் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான்.

நம்பினதின் பலனாக பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவற்றிற்குத் தன்னை சரிப்படுத்திக் கொள்ளுகிறான்.

பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.

எனக்கு பிடித்த கவிதைகள் !!!!



அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

- மகாகவி பாரதியார்




அச்சமில்லை...... அச்சமில்லை..................

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சை கொண்ட பொருளெலாம் இழந்து விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அட்ச்மேன்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


- பாரதியார்

எனக்கு பிடித்த பாடல்கள் 3

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி
ச்ந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் குங்க்ங்குமமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில் இந்த)
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தந்து
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
(மண்ணில் இந்த)




மின்னலே நீ வந்ததேனடி !!!

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே

கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்தே காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது ஓ
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா?
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா?
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா?
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா?
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா?
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது ஓ
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே


முன்தினம் பார்த்தேனே !!!


முன்தினம் பார்த்தேனே


பார்த்ததும் தோற்றேனே

சல்லடை கண்ணாக

நெஞ்சமும் பொன்னானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்கலூம் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென

(முன்தினம்..)
துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி

(முந்தினம்..)
கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே


எனக்கு பிடித்த பாடல்!2

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம்: ஆலயமணி

எனக்கு பிடித்த பாடல்!

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

படம் : ஜோதா அக்பர்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்

தூய தமிழ் இயக்கம்.

ஊடகங்களில் உள்ள தமிழைத் தூய தமிழாக்க வேண்டும் என்னும் மொரு வற்புறுத்தலும் இன்று உண்டு. இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என யோசித்துப் பார்த்தல் வேண்டும். நவீன தமிழ் என்பது கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பல போராட்டங்களிடையே வளர்ந்து வந்திருக்கிறது. சம்ஸ்கிருதத்தின் தாக்கத்தை முன்பு பெரிதாகக் கொண்டிருந்த அது ஊடகங்களில் அதனை வெகுவாகக் குறைத்து இன்று ஒரு சமப்பாட்டுக்குள் வந்திருக்கிறது எனலாம். இந்த நிலையில் மீண்டும் கலப்பில்லாத தூய தமிழுக்குத் திரும்ப வேண்டும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாததோடு, வரவேற்கக்க் கூடியதும் அல்ல என்றே சொல்லவேண்டும். கலப்பு என்பது வளர்ச்சிக்கான வித்து. இயற்கையில் எல்லாநிகழ்வுகளும் கலப்பில் வளர்வனவே.

சமஸ்கிருத மொழிச் சொற்கள் தமிழில் கலந்து, பல தமிழாகவே ஆகிவிட்டன. அவற்றை நாம் குறைந்த அளவில் பயன் படுத்திக் கொள்வது தமிழுக்கு ஓர் அழகேயாகும். சமஸ்கிருதச் சொற்களுக்கு மாற்றுத் தமிழ்ச் சொற்கள் இருந்தாலும் பல்வகைப் படுத்தல் கருதி இந்தச் சமஸ்கிருதச் சொற்களை பக்கத்தில் வைத்துக் கொள்வதே நல்லது என்பதே என் கருத்து.

எல்லா சமஸ்கிருதச் சொற்களும் தமிழ் மூலம் உடையவையே என்னும் கருத்தும் பாவாணர் நாள் தொட்டு இருந்து வருவதால் சமஸ்கிருதச் சொற்களை அளவாகப் பயன்படுத்துவதில் நமக்கு எந்தத் தயக்கமும் தேவையில்லை என்று கூடச் சொல்லிவிடலாம்.